நாடக வாழ்வு
தனதூ 18வது வயதில் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். சிறிதுகாலம் புது தில்லியில் வாழ்ந்த விஸ்வநாதன் 1945 இல் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக தன் பணியைத் தொடங்கினார். 1947இல் அகில இந்திய வானொலியில் முதலாக இந்தியா விடுதலைச் செய்தியை கூறியுள்ளார்[1]. மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து கலைத்துறையில் நுழைந்தார். பூர்ணம் தியேட்டர்ஸ் என்ற நாடக குழுவை ஆரம்பித்து ஏராளமான நாடகங்களை மேடை ஏற்றினார். அந்த நாடகக் குழுவின் பெயராலேயே சாதாரண விஸ்வநாதனாக இருந்த அவர், பூர்ணம் விஸ்வநாதன் என்று அழைக்கப்பட்டார்.
எழுத்தாளர் சுஜாதா வின் 10 நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதன் மேடை ஏற்றி உள்ளார். 1979ம் ஆண்டு துவங்கி 1997ம் ஆண்டு வரை அவர் நாடகங்களை நடத்தி வந்தார். அடிமைகள், கடவுள் வந்திருக்கிறார், அன்புள்ள அப்பா, வாசல், ஊஞ்சல், சிங்கம் அய்யங்காரின் பேரன், பாரதி இருந்த வீடு உள்ளிட்ட 10 நாடங்களை சுஜாதா எழுதி பூர்ணம் விஸ்நாதன் மேடை ஏற்றினார்.
அண்டர் செகரெட்டரி, 50=50 போன்ற நாடகங்களை தானே எழுதியும் நடித்துள்ளார். கடைசியாக 1997 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் பாரதி இருந்த வீடு என்ற நாடகத்தை அரங்கேற்றினார். அதன்பின்னர், அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் கோகுலம் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்ற பெயரில் நாடகங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய நகரங்களில் இவர் நாடகம் நடித்துள்ளார். சங்கீதா நாடக அகாடமி விருதை பெற்றுள்ளார
திரைப்படங்களில்
வருஷம் 16, வறுமையின் நிறம் சிவப்பு, தில்லுமுல்லு, மகாநதி, விதி, மூன்றாம் பிறை, புதுப்புது அர்த்தங்கள், கேளடி கண்மணி, ஆண் பாவம் உள்ளிட்ட 86 படங்களில் இவர் நட்த்திருக்கிறார்.
மறைவு
சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த பூர்ணம் விஸ்வநாதன் 2008, அக்டோபர் 1 மாலை 3.30 மணி அளவில் உயிரிழந்தார். மறைந்த பூர்ணம் விஸ்நாதனுக்கு சுசீலா என்ற மனைவியும், உமா, பத்மஜா என்ற மகள்களும், சித்தார்தா என்ற மகனும் உள்ளனர்.